விஷ்ணு விஷால் மேற்கொள்ளும் வித்தியாசமான சிகிச்சை… கவனம் ஈர்த்த புகைப்படங்கள்!

Last Modified சனி, 12 ஜூன் 2021 (15:34 IST)

நடிகர் விஷ்ணு விஷால் கப்பிங் தெரபி எனும் வித்தியாசமான சிகிச்சை முறையை மேற்கொண்டுள்ளார்.

வெண்ணிலா கபடிகுழு மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதற்கு முன்னதாக அவர் கிரிக்கெட் வீரராக இருந்தார். ஆனால் உடலில் ஏற்பட்ட காயத்தால் அவரால் அந்த கேரியரைத் தொடங்க முடியவில்லை. அதையடுத்து தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்களைக் கொடுத்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளார். சமீபத்தில் நடிகர் சூரியுடனான சர்ச்சைகளால் அதிகமாக கவனிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பண்டைய கால தெரபியான கப்பிங் தெரபி செய்துகொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ரத்த ஓட்டம், மன அமைதி உள்ளிட்ட ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :