ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 25 ஜனவரி 2024 (21:05 IST)

திரைப்பட கல்லூரிக்குள் புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல்!

pune film Institute
புனே திரைப்பட கல்லூரியில்  பாபர் மசூதி இடிப்பு இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என்று பேனர் வைத்த மாணவர்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

புனே உள்ள திரைப்பட கல்லூரியில்  இன்று பாபர் மசூதி இடிப்பு என்பது இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறி, அக்கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் பேனர் வைத்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த மாணவர்கள் மீது வலதுசாரி அமைப்பின் தாக்குதல் நடத்தியதுடன், அவர்கள் வைத்திருந்த பேனரையும் தீயிட்டு எரித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 23 ஆம் தேதி பிற்பகலில் இந்தக் கல்லூரிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் பாதுகாவலர்களை தாக்கி, ஜெய்ஸ்ரீராம் என்ற முழக்கமிட்டு,  தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும், நிலையில், மர்ம நபர்கள் யாரென்று அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் கூறியுள்ளனர்.