வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendrna
Last Modified: புதன், 24 ஜனவரி 2024 (10:06 IST)

ராம பக்தர்கள் ஊர்வலத்தில் கலவரம்.. மும்பையிலும் வந்தது புல்டோசர் கலாச்சாரம்..!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இந்து  மக்களின் ஊர்வலத்தில் கலவரம் செய்பவர்களின் வீடுகள் புல்டோசர் வைத்து இடிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இந்த கலாச்சாரம் தற்போது மும்பையிலும் தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. 
 
சமீபத்தில் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் நாடு முழுவதும் பல ராமர் கோவிலில் விசேஷங்கள் நடைபெற்றது என்பது ராமருக்கான ஊர்வலங்கள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அந்த வகையில் மும்பையில் நேற்று ராம பக்தர்கள் ஊர்வலமாக சென்ற போது திடீரென கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 13 பேர் கைது செய்த செய்யப்பட்டனர். இந்த நிலையில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக அந்த 13 பேர்கள் இருக்கும் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டதாகவும் அந்த வீடுகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் புல்டோசர் கலாச்சாரம் மும்பைக்கு வந்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து  வருகின்றனர்
 
Edited by Mahendrna