கெஜ்ரிவால் இன்னும் இரண்டு வருஷம் தான், அதுக்கு அப்புறம்??... திகிலை கிளப்பும் வைரல் ஜோசியர்
அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் ஆட்சியைப் பிடித்தாலும், இரண்டு ஆண்டுகளில் அவர் ஆட்சியை இழந்துவிடுவார் என வைரல் ஜோசியர் பாலாஜி ஹாசன் கூறியுள்ளார்.
இன்று டெல்லி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் பெரும்பான்மை தொகுதிகளை வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கவுள்ளது.
இதனிடையே கடந்த 8 ஆம் தேதி, அதாவது தேர்தலுக்கு முந்தைய நாள் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலம் அடைந்த ஜோசியரான பாலாஜி ஹாசன் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் “இந்த தேர்தலிலும் கெஜ்ரிவால் தான் வெல்வார். ஆனால் 2022 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி ஆட்சியை இழக்கும். கெஜ்ரிவாலின் கட்டம் அப்படி இருக்கிறது” என கூறியுள்ளார்.
மேலும் அவர், “ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை இழக்க பாஜக கைப்பற்றும், சனி கும்பத்துக்கு போவார், அது கேதுவோடு சம்பந்தப்படுவதால் ஆட்சியில் பிரச்சனை ஏற்படும், கெஜ்ரிவாலின் சுய ஜாதகப்படி இவ்வாறு தான் நடக்கும்” என கூறியுள்ளார்.
கடந்த உலக கோப்பை போட்டியின் போது எந்த அணி வெற்றி பெறும் என்பதை கணித்து சொன்னதன் மூலம் ஜோசியர் பாலாஜி ஹாசன் வைரலானது குறிப்பிடத்தக்கது.