டெல்லி எலக்ஷன் ரிசல்ட் எதிரொலி: ஈ ஓட்டும் பாஜக ஆபிஸ்!!
டெல்லியில் நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் பாஜக அலுவலகம் ஈ, காக்கா கூட இல்லாமல் வெறிச்சோடி உள்ளது.
பிப்ரவரி எட்டாம் தேதி நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் வாக்குப் பதிவில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வந்த நிலையில் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையிலேயே 25 தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது 57 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து பாஜக 13 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளும் பின்னடைவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி அமைவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வர் பதவியை ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தேர்தலில் தோல்வியுற்றுள்ளதால் பாஜக அலுவலகம் ஈ, காக்கா கூட இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிரது. டெல்லி பட்பர்கஞ் தொகுதியில் பாஜகவின் ரவீந்திர சிங் நேகியை விட, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா 1000 வாக்குகளுக்கு மேல் பின்னடைவு கண்டுள்ளது பாஜகவிற்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.