மோடியும் அமித்ஷாவும் கனவில் வாழ்கிறார்கள்..ராகுல் ஆவேசம்
பிரதமர் மோடியும் அமித்ஷாவும் கனவுலகில் வாழ்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பாஜக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இதனை எதிர்கட்சிகளும் கண்டித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று தனது தொகுதியான வயநாடு மக்களை சந்திக்க வந்த ராகுல் காந்தி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ”நாட்டின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை சந்தித்து உள்ளது. இதற்கு பிரதமர் மோடியும், அமித்ஷாவும் காரணம், ஆனால் அவர்கள் கனவுலகில் வாழ்ந்து வருகிறார்கள்” என குற்றம் சாட்டியுள்ளார்.