டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜக எம்.எல்.ஏக்கள் இரவில் தர்ணாப் போராட்டம்: என்ன காரணம்?
டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜக எம்.எல்.ஏக்கள் இரவில் தர்ணாப் போராட்டம்: என்ன காரணம்?
டெல்லியில் இரவு முழுவதும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் திடீரென தர்ணா போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியின் துணைநிலை ஆளுநர் சக்சேனா அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் ஆம் ஆத்மி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சட்டமன்ற வளாகத்தில் நேற்று இரவு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
சக்சேனா, காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் தலைவராக இருந்த 1400 கோடி ரூபாய் நோட்டுக்களை மாற்றுமாறு தனது ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சட்டமன்ற உள்ளிருப்பு போராட்டம் காரணமாக இரவு முழுவதும் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது