செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated: செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (21:19 IST)

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அதிகார போதை: அன்னா ஹசாரே கண்டனம்!

anna hazare
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அதிகார போதை ஏற்பட்டுள்ளது என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கண்டனம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
முதல்வரான பின்னர் அவர் ஒருமுறை கூட லோக்பால், லோக் ஆயுக்தாவை பற்றி பேசவில்லை என்றும் அதைக் கொண்டுவரும் முயற்சியை செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மதுபான கொள்கைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக மது விற்பனைக்கு எதிராக கிராமப்புறங்கள் குரல் கொடுக்கும் அதிகாரம் படைத்தது ஆனால் இன்று டெல்லி அரசு மதுபான கொள்கையை அமல்படுத்த முயன்று அதனால் ஊழலில் சிக்கி உள்ளது 
 
நீங்கள் அதிகார போதையில் இருக்கிறீர்கள் என்றும் உங்கள் ஆம் ஆத்மி கட்சியை மற்ற எந்த கட்சியில் இருந்து வித்தியாசமாக இருப்பதாக எனக்கு தோன்றவில்லை என்றும் தெரிவித்துள்ளார்