வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 13 ஜனவரி 2024 (20:07 IST)

ஏரோ பிரிட்ஜில் அடைத்து வைத்தனர்-நடிகை ராதிகா ஆப்தே

radhika apte
விமான நிலையம்  ஒன்றில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏரோ பிரிட்ஜில் அடைத்து வைத்தனர் என்று பிரபல நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

இந்தி சினிமாவின் பிரபல நடிகை ராதிகா ஆப்தே. இவர், விஜய்சேதுபதி, கத்ரினா கைஃப் ஆகியோருடன் இணைந்து மெரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம்  நேற்று ரிலீஸானது.

இந்த  நிலையில், தனது விமான பயணம் குறித்து அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

இன்று காலை 8:30 மணிக்கு விமானத்தில் செல்ல இருந்த நிலையில், 10;15 மணியை கடந்தும் விமானம் புறப்படவில்லை.

விமானம் புறப்படும் எனக் கூறி,ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் உள்ளிட்ட பயணிகள் அனைவரையும் ஏரோ பிரிட்ஜில் அடைத்து வைத்துள்ளனர்.

அங்குள்ள பாதுகாவலர்கள் கதவைத் திறக்கவில்லை. ஊழியர்களும் என்ன நடக்கிறது  என்று எதுவும் கேட்கவில்லை.

12 மணிவரை உள்ளேதான் இருக்க வேண்டுமென கூறினர். அங்கு குடிக்க தண்ணீரும் இல்லை. இப்பயணத்திற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

இது எந்த விமானம் என்று ராதிகா ஆப்தா குறிப்பிடவில்லை. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.