அம்பானி கலாச்சார மையத்தில் அமீர்கான் மகள் வரவேற்பு நிகழ்ச்சி!
பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமீர்கானின் மகள் இரா கானுக்கும் உடற்பயிற்சியாளர் நிபுர் ஷிக்காரேவுக்கும் கடந்த மூன்றாம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் எளிய முறையிலும் வித்தியாசமான முறையிலும் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதையடுத்து இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி அம்பானி கலாச்சார மையத்தில் நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஷாருக் கான், சல்மான் கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். சுமார் 2500 பேருக்கு மேல் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விருந்து நிகழ்ச்சியில் 9 மாநில உணவுகள் பரிமாறப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.