1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2024 (16:37 IST)

வித்தியாசமாக நடைபெற்ற நடிகர் அமீர் கான் மகள் திருமணம்!

ameer khans daughter Ira Khan's wedding
பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமீர்கானின் மகள்  இரா கானுக்கும் உடற்பயிற்சியாளர் நிபுர் ஷிக்காரேவுக்கும்  நேற்று திருமணம்  நடைபெற்றது.

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமீர்கான். இவர் தங்கல், தூம்3, லால் சிங் சத்தா உள்ளிட்டபல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், அமீர்கான் மற்றும் அவரது முன்னாள் மனைவி ரீனா தத் இணையின் மகளான இரா கானுக்கும், உடற்பயிற்சியாளர் நுபுர் ஷிக்காரேவுக்கும்  நேற்று திருமணம் நடைபெற்றது.

இதில், நுபுர்  திருமண ஆடைகளை அணியாமல், உடற்பயிற்சிக்கான ஆடைகளை அணிந்து கொண்டு வீட்டில் இருந்து 8 கிமீட்டர் ஓடி வந்து திருமண மண்டபத்தை அடைந்துள்ளார்.

அதே ஆடையுடன் திருமண ஒப்பந்தமும் செய்துள்ளார்.

அமீர்கானின் மகளின் திருமணம் எளிய முறையிலும் வித்தியாசமான முறையிலும் நடைபெற்றது.

ameer khan and kiran rao

இந்த திருமணத்தின்போது, அமீர்கான் அவரது முன்னாள் மனைவி  கிரண் ராவுக்கு முத்தம் கொடுத்த வீடியோவும் பரவலாகி வருகிறது.