இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகந்த் நரவானே லடாக்கில் திடீர் ஆய்வு!

siva| Last Updated: வியாழன், 3 செப்டம்பர் 2020 (11:17 IST)
கடந்த ஜூன் மாதம் லடாக்கில் உள்ள கால்வான் என்ற பள்ளத்தாக்கில் இந்திய சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பில் 35 பேர் பலியானதாக கூறப்பட்டது
இந்த சம்பவத்திற்கு அடுத்து இந்தியா மற்றும் சீனா நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. சீனாவின் முக்கிய செயலிகள் கிட்டத்தட்ட அனைத்துமே இந்தியாவில் தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றும் கூட பப்ஜி உள்பட 118 சீனாவின் செயலிகளை இந்தியா தடை செய்தது. அது மட்டுமன்றி இந்தியன் ரயில்வே உள்பட பல்வேறு துறைகளில் சீனா நிறுவனங்கள் ஒப்பந்தம் பெற்றிருந்த நிலையில் அந்த ஒப்பந்தங்கள் அனைத்துமே ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் சீன ராணுவ வீரர்கள் எல்லையில் ஊடுருவல் வருவதாகவும் அதற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியானது. இதனால் லடாக் பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது

இந்த நிலையில் தற்போது இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்து நரவனே என்பவர் லடாக் பகுதியில் திடீரென சென்று ஆய்வு நடத்தி வருகிறார். சீனாவின் அத்து மீறல் தொடர்பாக ராணுவ உயரதிகாரிகளுடன் இராணுவத் தளபதி மனோஜ் ஆலோசனை நடத்தி வருவதாகவும் விரைவில் அதிரடி நடவடிக்கைகளை இந்திய ராணுவம் எடுக்கும் என்று கூறப்படுவதால் இந்திய சீன எல்லையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :