ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (13:18 IST)

தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்களா.. இல்லையா..? மாநிலங்களவையில் வைகோ ஆவேச பேச்சு..!!

Vaiko
கடந்த 40 ஆண்டுகளில் 875 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
 
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யப்படும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.  அண்மையில் தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் மீனவர் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் மீனவர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 
 
இந்நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த 40 ஆண்டுகளில் 875 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார்.
 
இந்திய மீனவர்கள் கொலையை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று வைகோ குற்றம் சாட்டினார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பெரும் துயரங்களுக்கு ஆளாகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார். மேலும் தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்களா இல்லையா என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்தார். 


தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்களாக இந்த நாடு கருதுமையானால் இந்த கொடுமைகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என வைகோ காட்டமாக பேசினார்