அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் அமைச்சர்.. பதிலடி என்ன தெரியுமா?
அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு பாகிஸ்தான் அமைச்சர் வாழ்த்து தெரிவித்த நிலையில் உங்கள் நாட்டின் பிரச்சனையை மட்டும் நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள் என்று அவர் பதிலடி கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் தற்போது ஆறாவது கட்ட பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்கு போட்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்த புகைப்படத்தை பாகிஸ்தான் அமைச்சர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வெறுப்பு மற்றும் தீவிரவாத சக்திகளை, அமைதி மற்றும் நல்லிணக்கம் தோற்கடிக்கட்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கு பதிலடி ஆக அரவிந்த் கெஜ்ரிவால் நானும் எனது நாட்டு மக்களும் எங்களின் பிரச்சினைகளுக்கு கையாளும் திறன் கொண்டவர்கள். பாகிஸ்தானில் தான் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. நீங்கள் உங்கள் நாட்டை மட்டும் கவனித்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்திய தேர்தல் என்பது எங்களது உள் விவகாரம், பயங்கரவாதத்தின் ஆதரவாளர்களின் தலையிட்டை இந்தியா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்றும் அவர் பதிலடி கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran