1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 24 மே 2024 (15:38 IST)

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1349 சதய விழாவில்- அமைச்சர் கே என் நேரு மாலை அணிவித்து மரியாதை!

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349 சங்கம் விழாவையொட்டி திருச்சி ஒத்தக்கடை அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுகவின் முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 
இந்நிகழ்வில் மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, திருச்சி மாநகராட்சி மேயர் மு‌‌.அன்பழகன், பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு, எம்.எல்.ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின் குமார், செளந்திர பாண்டியன்,எம்.பி. பழனியாண்டி, நிர்வாகிகள் மாவட்ட துணைச் செயலாளர் முத்துச் செல்வம்,  மாத்தூர் கருப்பையா, கதிர் வேல், பகுதிச் செயலாளர்கள் மோகன் தாஸ்,காஜாமலை விஜய், நாகராஜன், கிராப்பட்டி  செல்வம், புத்தூர் தர்மராஜ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.