1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (16:39 IST)

டெல்லியை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்: அதிஷி தேர்வுக்கு ஆம் ஆத்மி பெண் எம்பி எதிர்ப்பு..!

டெல்லி புதிய முதலமைச்சராக அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இனி டெல்லியையும் டெல்லி மக்களையும் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என ஆம் ஆத்மி எம்.பி. கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் செய்ததாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் திடீரென அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்பட்ட நிலையில், புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் இன்று கூடினர்.

இந்த கூட்டத்தில் ஒருமனதாக முதலமைச்சர் வேட்பாளராக அதிஷி தேர்வு செய்யப்பட்ட நிலையில், இன்று மாலை அவர் கவர்னரை சந்தித்து, தனக்கு முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், டெல்லி முதலமைச்சராக அதிஷி தேர்வு செய்யப்பட்டதற்கு ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ. சுவாதி மலிவால் என்பவர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். "இன்றைய நாள் டெல்லிக்குப் மிகவும் சோகமான நாள். பயங்கரவாதி அப்சல் குருவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற நீண்ட போராட்டம் நடத்திய குடும்பத்தைச் சேர்ந்த பெண் டெல்லி முதலமைச்சராகிறார். அதிஷியை பொருத்தவரை, அப்சல் ஒரு நிரபராதி; அப்சல் குரூப் மீது அரசியல் சதியால் போடப்பட்ட பொய் வழக்கு. ஆனால் அதே நேரத்தில், அதிஷி வெறும் 'டம்மி' முதலமைச்சர் தான். கடவுள்தான் டெல்லியை காப்பாற்ற வேண்டும்," என்று அவர் பதிவு செய்துள்ளார். அவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva