வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 26 ஜூன் 2024 (07:39 IST)

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

சூரஜ் ரேவண்ணாவின் கட்சி தொண்டர் சிவக்குமார், சூரஜ் ரேவண்ணா தன்னையும் ஓரின சேர்க்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவக்குமார் குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதே சிவக்குமார் தான், முதலில் புகார் அளித்த சேத்தன் என்ற நபர், சூரஜ் ரேவண்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக ஒலேநரசிபுரா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநில முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை ரேவண்ணா ஆகிய இருவரும் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்  சூரஜ் ரேவண்ணாவும் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது தெரிந்ததே.

வேலை வாங்கி தர அணுகியபோது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக  அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சூரஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சூரத் ரேவண்ணா மீது ஓரினச்சேர்க்கை பாலியல் குற்றச்சாட்டும் தற்போது எழுந்துள்ளதை அடுத்து அதற்கு தனியாக ஒரு வழக்கு பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Siva