1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Annual budget will be amend in Frbruary

மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட் தாக்கல்…! – எதிர்பார்ப்புகள் என்ன?

India
மத்திய அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஆண்டுதோறும் அந்தந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரியில் தாக்கல் செய்கிறது. அந்த வகையில் தற்போதைய 2022-23ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழு துறை ரீதியாக பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் திட்ட அறிக்கையை தயாரித்து வருகின்றது. தற்போது கொரோனாவிலிருந்து இந்தியா மெல்ல மீண்டு வந்தாலும், தொழிற்துறை முன்னேற்றத்தில் பல சவால்களை சந்தித்து வருகிறது.

இதனால் இந்த ஆண்டு பட்ஜெட் அறிவிப்பில் தொழிற்துறை, சிறு, குறு தொழில்களுக்கான சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜிஎஸ்டி வரி விதிப்பை குறைத்தல், நெடுஞ்சாலை திட்டங்கள் குறித்தும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
யாரும் மதசாயம் பூசவில்லை; மாணவிக்கு நீதி வேண்டும்! – பாஜக அண்ணாமலை!