திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 ஜனவரி 2022 (10:03 IST)

இந்திய பங்குசந்தை தொடர்ந்து சரிவு! – அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!

இந்திய பங்குசந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று சரிவை சந்தித்துள்ளது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய பங்குசந்தை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது. சில வாரங்கள் முன்னதாக இந்த ஆண்டில் முதல்முறையாக சென்செக்ஸ் 63 ஆயிரத்தை கடந்தது. இதனால் பங்கு வர்த்தகம் தீவிரமடைய தொடங்கியது.

இந்நிலையில் நேற்று முதலாக பங்கு வர்த்தக புள்ளிகள் சரிவை சந்திக்க தொடங்கியுள்ளன. நேற்றை தொடர்ந்து இன்று பங்கு வர்த்தகம் தொடங்கியதுமே இறக்கத்தை சந்திக்க தொடங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 57,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 234 புள்ளிகள் குறைந்து 16,914 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதனால் பங்குசந்தை முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.