செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 12 ஏப்ரல் 2018 (16:57 IST)

சோழர்கள் ஆண்ட காஞ்சிபுரம் - உளறிக்கொட்டிய மோடி

இன்று சென்னை வந்த மோடி திருவிடந்தையில் பேசிய பேச்சு கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகியுள்ளது.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளது. 
 
அந்நிலையில், சென்னை திருவிடந்தையில் ராணுவ கண்காட்சியை திறந்து வைக்க மோடி சென்னை வந்தார். எனவே, திமுக, நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமை கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கருப்பு சட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். விமான நிலையத்திலும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.
 
ஆனாலும், ஹெலிகாப்டர் மூலம் மோடி திருவிடந்தை சென்றார். அப்போது மேடையில் பேசிய அவர் ‘சோழர்கள் ஆண்ட இந்த காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வந்ததை நான் பெருமையாக கருதுகிறேன்” எனப் பேசினார்.
 
உண்மையில், காஞ்சிபுரத்தை பல்லவர்களே ஆண்டனர். ஆனால், மோடி தவறாக சோழர்கள் என குறிப்பிட்டார். இது சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.