திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 2 ஜனவரி 2020 (19:46 IST)

டிக் டாக்கில் கலக்கும் துணை முதல்வர்: கொந்தளிக்கும் எதிர்கட்சி!

டிக் டாக்கில் கலக்கும் ஆந்திர துணை முதல்வர் புஷ்பா ஸ்ரீவாணிய எதிர்கட்சியினர் விமர்சித்துள்ளனர். 
 
ஆந்திராவில் சில மாதங்களுக்கு முன்பு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இதனைத்தொடர்ந்து ஜெகன் பல அறிவிப்புகளை மக்களுக்காக வழங்கி வருகிறார். ஜெகன் மோகன் ரெட்டியை அம்மாநில மக்கள் முதல்வராக இல்லாமல் தங்கள் வீட்டி பிள்ளையாகவே நினைக்கின்றனர். 
 
ஜெகன் மோகன் ரெட்டி வழக்கமாக இல்லாமல் 5 துணை முதல்வர்களை நியமித்தார். அதில் ஒரு துணை முதல்வராக இருப்பவர் புஷ்பா ஸ்ரீவாணி. இவர் சமீபத்தில், ராயலசீமா முட்டுபிடா மன ஜெகன் அண்ணா என்ற பாடலுக்கு முக பாவனைகளுடன் டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் வைரலாகி உள்ளது. 
 
புஷ்பா ஸ்ரீவாணி பழங்குடியினர் நலவாழ்வு துறை அமைச்சராகவும் உள்ளார் என்பது கூடுதல் தகவல். இந்நிலையில் இதை, எதிர்க்கட்சிகள் ஒரு துணை முதல்வராக இருந்து கொண்டு அநாகரிகமாக டிக் டாக் வீடியோ வெளியிட்டது பொறுப்பற்ற செயல் என விமர்சித்து வருகின்றனர்.