தொடர்புடைய செய்திகள்
- கொரோனா சிகிச்சை மையத்திற்கு ரூ.2.5 லட்சம் சொந்த பணத்தை கொடுத்த விஜய்வசந்த் எம்பி!
- சென்னையில் தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது: மேயர் வருத்தம்
- மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு: டெல்லி முதல்வர் அறிவிப்பு!
- இறந்த உடலுக்கு மத்தியில் நோயாளிகளுக்கு சிகிச்சை: புதுவையில் அதிர்ச்சி!
- கொரோனாவிலிருந்து மீண்டு வா இந்தியா! – சிட்னி பல்கலைகழகத்தில் மூவர்ண கொடி!
கேரளா, ஆந்திராவில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் தமிழகத்தைப் போலவே அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றைய கேரளா மற்றும் ஆந்திர மாநிலத்தின் கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தற்போது பார்ப்போம்
கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 29,704 என்றும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை என்றும் 89 அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று 1,15,982 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் இன்று ஒரே நாளில் 34,296 பேர்கள் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
அதேபோல் இன்று ஆந்திர மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 24,171 என்றும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை என்றும் 101 அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,35,491 என்றும் அம்மாநிலத்தில் 2,10,436 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
அடுத்த கட்டுரையில்
