வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 22 ஜூலை 2023 (18:35 IST)

மே., வங்கத்தில் பாஜக பெண் வேட்பாளரை ஆடையின்றி ஊர்வலமாக இழுத்துச் சென்ற கும்பல்?

மேற்கு வங்க மாநிலத்தில் ஆடையின்றி பெண் ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. ஹவுரா  மாவட்டம் பஞ்ச்லா கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்த்லில் பாஜக சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் ஒருவர் வாக்குச்சாவடிக்கு வந்தபோது, அவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஹிமந்தா ராய் உள்ளிட்ட சிலர் தாக்கியதாகவும், அதன்பின்னர், அப்பெண்ணின் ஆடைகளை களைந்து அங்குள்ள பகுதி முழுவதும் ஊர்வலமாக இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, போலீஸிலில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஹிமந்தா ராய் உள்ளிட்ட சிலர் மீது  பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதுபற்றி காவல்துறை தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.