1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 13 ஜூன் 2023 (16:17 IST)

தொடர் சண்டை… தாயைக் கொன்று சூட்கேசில் அடைத்த மகள்

death
மேற்கு வங்க மாநிலத்தில், பெங்களூரைச் சேர்ந்த இளம்பெண் (35) வசித்து வருகிறார். இவர் பிசியோதெரபி என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவரது வீட்டில் அவருக்கும் அவரது தாயாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் தன் தாயாரை கத்தியால் குத்திக் கொன்றார்.

அதன்பின்னர், தாயாரின் உடலை சூட்கேசில் அடைத்து, போலீஸ் ஸ்டேசனுக்குக் கொண்டு சென்றுள்ளார்.

அந்த சூட்கேசை திறந்து பார்த்த போலீஸார் அப்பெண்ணிடம் இதுபற்றி விசாரணை நடத்தி கைது செய்தனர்.

அப்பெண் கூறியதாவது:  ''தனக்கு திருமணமாகி கணவர் இருக்கிறார். சம்பவத்தன்று அவர் வீட்டில் இல்லை. மாமியார் பக்கத்து அறையில் இருந்தபோதிலும் அவருக்குத் தெரியாமல், தாயை கத்தியால் குத்தி, தூக்கமாத்திரைகளை ஊட்டி விட்டு கொன்று,  அவரது உடலை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்ததாக ''தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.