அம்மாடியோவ்... 81 வயதில் தாத்தா என்ன செய்தார் தெரியுமா..?
ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த நாராயணன் சாஹூ என்பவர் இரண்டுமுறை எம்.எல்.ஏவாகவும், ஒருமுறை எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
தன் நீண்ட அரசியல் வாழ்க்கையை ஓரமாக ஒதுக்கிவிட்டு தற்போது கல்வியைக் கையில் எடுத்துள்ளார். அதாவது கல்லூரியில் சேர்ந்து படிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அவருக்கு வயது 81 ஆகும்.
1963 ஆம் ஆண்டில் ராவெண்டி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பிரிவில் பட்டம் பெற்றார். பின்னர் 2009 ஆம் ஆண்டில் உத்கல் பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைப் பட்டம் பெற்றார்.
மேலும் கடந்த 2102 ஆம் ஆண்டில் எம்பில் பட்டம் பெற்றார். அத்துடன் நிற்காமல் தற்போது அவருக்கு பிஎச்டி பட்டம் பெற தீர்மானித்து அதே பல்கலையில் சேர்ந்துள்ளார்.
அவருக்கு கொள்ளுப்பேரன்களைப் போல் உள்ள இளைஞர்களுடன் இணைந்து, ஆர்வத்துடன் படித்து வருகிறார். அரசியலில் பிஎச்டி படிக்க வேண்டும் என்ற அவரது ஆசை தற்போது நிறைவேறும் நிலையில் உள்ளது.
கல்லூரிக்கு மட்டம் தட்டும் இளைஞர்கள் இவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விசயம் எவ்வளவோ உண்டு.