செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 8 ஜனவரி 2019 (15:58 IST)

லாஸ்ட் வார்னிங்: ரசிகர்கள் மீது எரிமலையாய் சீறிய ரஜினி

ரஜினிகாந்த் கடந்த ஆண்டு நான் அரசியலுக்கு வருவேன் என அறிவித்தார். இன்று வரை அந்த அறிவிப்பு மட்டுமே நிலையாக உள்ளதே தவிற கட்சி உருவாகிய பாடில்லை. 
 
ஆனால், அரசியல் குறித்த அறிவிப்பு வெளியானதும், ரஜினியின் ரசிகர் மன்றக்குழுவினர் ஒவ்வொரு முக்கிய நகரங்களில் வாட்ஸ் ஆப் குரூப்பை உருவாக்கி அதன் மூலம் செய்திகள் பகிரப்பட்டு வருகின்ரன. 
 
இதில் பகிரப்படும் செய்திகள் ரஜினியின் பார்வைக்கும் செல்லும். செய்திகள் ஏதேனும் மிகையாக இருந்தால் ரஜினி தக்க நடவடிக்கைகளையும் எடுப்பார். அந்த வகையில் சில புகார்களில் சிக்கியவர்களை குரூப்பை விட்டு நீக்குமாறு உத்தரவு வந்தது. 
ஆனாலும், சிலர் நீக்கப்படாமல் இருந்துள்ளனர். இது குறித்த அறிந்த ரஜினி வாட்ஸ் ஆப் குழுக்களுக்கு இன்று அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
 
அதில், மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களை வாட்ஸ் ஆப் குழுக்களில் இருந்தும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்படி நீக்கப்படும் உறுப்பினர்களை மறு உத்தரவு வரும் வரை குரூப்பில் சேர்க்க கூடாது.
 
அப்படி நீக்காவிட்டால் குழுவின் அட்மின்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரஜினி மக்கள் மன்ற மாவட்ட, ஒன்றிய, நகர வாட்ஸ் ஆப் குரூப்களில் பிற மாவட்ட நபர்களை சேர்க்க கூடாது. வாட்ஸ் ஆப் குரூப்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை மட்டுமே உறுப்பினராக சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.