வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 1 ஜூன் 2024 (11:55 IST)

’எக்சிட் போல்’’ விவாதத்தை புறக்கணித்த காங்கிரஸ்.. கிண்டல் செய்த அமைச்சர் அமித்ஷா..!

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்த நிலையில் இன்று ஏழாவது கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 
 
இன்றுடன் நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அன்றைய இரவே புதிய ஆட்சி அமைப்பது யார் என்பது கிட்டத்தட்ட தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி மாலை 6 மணி வரை எக்சிட் போல் வெளியிட தடை செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அனைத்து ஊடகங்களிலும் எக்சிட் போல் வெளியாக உள்ளது. மேலும் இது குறித்த விவாதங்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தொலைக்காட்சிகளில் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் எக்சிட் போல் விவாதங்களில் காங்கிரஸ் கலந்து கொள்ளாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து அமைச்சர் அமித்ஷா கேலி செய்துள்ளார். லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தொடர்பான இன்றைய விவாதத்தில் காங்கிரஸ் பங்கேற்காதது ஏன் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் தோற்கின்ற காரணத்தினால் இந்த முறையும் தோல்விக்கு விளக்கம் அளிக்க முடியாது என விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை என அமித்ஷா கிண்டல் செய்துள்ளார். இந்த கிண்டலுக்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து என்ன பதிலடி கொடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Mahendran