ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 மே 2024 (19:34 IST)

ஒரே நாளில் தமிழகம் வரும் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா.. என்ன காரணம்?

modi amithsha
பிரதமர் மோடி வரும் 30ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாகவும் அவர் குமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியானது.
 
தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி   முடித்துள்ள நிலையில் 30ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வரும் அவர் ஜூன் 1 வரை இரவு பகலாக தியானத்தில் ஈடுபடுவார் என்றும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி தியானம் முடிந்ததும் அவர் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி செல்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து கன்னியாகுமரியில் பிரதமர் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
இந்த நிலையில் பிரதமர் மோடி 30 ஆம் தேதி தமிழகம் வர இருக்கும் நிலையில் அதே 30-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர இருக்கிறார். அவர் ஏற்கனவே தமிழகத்தில் உள்ள திருமயம் என்ற பகுதியில் உள்ள கோட்டை பைரவர் கோயிலில் தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் 30ஆம் தேதி திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் தரிசனம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran