தொடர்புடைய செய்திகள்
- முடிவுக்கு வராத விவசாயிகள் போராட்டம்! – குடியரசு தலைவரை சந்திக்கும் எதிர்க்கட்சிகள்!
- ஆந்திரா மர்ம நோய்; நோயாளிகள் உடலில் வேதிப்பொருட்கள்! – மருத்துவர்கள் அதிர்ச்சி
- 4G போர் அடிச்சு போச்சு.. 5G ஐ போட்டு விட வேண்டியதுதான்! – அம்பானியின் அடுத்த திட்டம்!
- மனைவியை கொன்றுவிட்டு கேம் விளையாடிய கொடூரன்! – ஜோத்பூரில் பரபரப்பு!
- விவசாயிகளுக்கு ஆதரவு… விருதை திருப்பி அளித்த விளையாட்டு வீரர்!
அரசியல் சாணக்கியர் அஸ்திரத்திற்கும் அசராத விவசாயிகள்! – தொடரும் போராட்டம்!
டெல்லியில் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் நிலையில் பாஜக உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சு வார்த்தையிலும் முடிவுகள் எட்டப்படவில்லை.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றுடன் 14 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில் நேற்று விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் பந்த் நடைபெற்றது.
இந்நிலையில் அரசியல் சாணக்கியர் என போற்றப்படும் பாஜகவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேசியுள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதாக அவர் கூறியதாக தெரிகிறது. ஆனால் சட்ட திருத்தம் தேவையில்லை சட்டத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என விவசாயிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் போன நிலையில் இன்று நடைபெற இருந்த 6வது கட்ட பேச்சுவார்த்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
