1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 24 ஜனவரி 2020 (08:03 IST)

அரவிந்த் கெஜ்ரிவாலுக்குத்தான் முதலிடம்: அமித்ஷா பரபரப்பு பேச்சு

டெல்லியில் பிப்ரவரி 8ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அங்கு காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி என மும்முனை போட்டி உருவாகியுள்ளது. தேர்தல் பிரச்சாரம் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
 
ஊழலை ஒழிப்போம் என்று கூறி வரும் அரவிந்த் கெர்ஜிவால், அதற்கான லோக்பால் சட்டத்தை ஏன் நிறைவேற்றவில்லை. நீங்கள் அளித்த வாக்குறுதியை நீங்கள் மறக்கலாம். ஆனால் டெல்லி மக்கள் என்றைக்கும் மறக்க மாட்டார்கள்
 
நீங்கள் அன்னா ஹசாரே உதவியுடன்தான் முதல்வராக ஆனீர்கள். ஆனால் லோக்பாலுக்கு என ஒரு சட்டத்தை உங்களால் கொண்டு வர முடியவில்லை. நான்கரை ஆண்டுகளாக முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த ஒரே சாதனை பிரதமர் மோடியை வேலை செய்யவிடாமல் செய்தது தான்
 
போலி வாக்குறுதிகள் அளிப்பதில் யாருக்கு முதலிடம் என்ற ஒரு போட்டி வைத்தால் அதில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குத்தான் முதலிடம் கிடைக்கும். அந்த அளவுக்கு போலியான நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அவர் அள்ளி வழங்கி வருகிறார் என்று அமித்ஷா அந்த கூட்டத்தில் பேசினார்,