புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 17 ஆகஸ்ட் 2019 (10:43 IST)

என்ன ஆனது ஜெட்லிக்கு..? நள்ளிரவில் மருத்துவமனை விரைந்த அமித் ஷா...

அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நள்ளிரவு அவரை காண மத்திய அமைச்சர்கள் விரைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
பாஜகவின் முக்கிய உறுப்பினராகவும், நிதியமைச்சராகவும் சிறப்பாக செயல்பட்டவர் அருண் ஜெட்லி. கடந்த 9 ஆம் தேதி மூச்சு திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவனமையில் அனுமதிக்கப்பட்டார். 
 
அவரது உடல்நிலை மோசமான நிலையில் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், இப்போது அவரை அருண் ஜெட்லியின் உடல்நலன் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை. 
இந்நிலையில் அவரது உடல்நலம் கவலைகிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், நேற்று பிற்பகல் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்தித்தா. இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு 11.15 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் ஆகியோர் சந்தித்தனர். 
 
இதற்கு முன்னரே மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் இணை அமைச்சர் அஸ்வினி சவுபே ஆகியோர் மருத்துவமனை சென்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக வெற்றியடைந்ததை தொடர்ந்து அருண் ஜெட்லிக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்படும் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால் தன் உடல்நிலையை கருத்தில் கொண்டு பொறுப்புகளில் இருந்து விலகிக் கொண்டார் அருண் ஜெட்லி.