செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 29 ஜூன் 2019 (17:47 IST)

ஆஸ்பெட்டாஸ் கூரையால் குழந்தைகள் பலி ! அதிர வைத்த ரிப்போர்ட்

பீகார் மாநிலத்தில் சமீபத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் 150 குழந்தைகள் பலியாகினர். இது அம்மாநிலத்தில் மட்டுமல்லாமல் பாராளுமன்றத்தில் தற்போது நடைபெறும் லோக்சபாவிலும் எதிரொலித்துள்ளது. இந்நிலையில் பலியான குழந்தைகள் அனைவரும் ஆஸ்பெட்டாஸ் மேற்கூரை கொண்ட வீட்டில் வசித்தவர்கள்  என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள முஷாபர்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 150 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் பலியானதாக தெரிவித்தனர்.
 
இந்நிலையில் இந்தக் குழந்தைகள் இறந்ததற்காக காரணத்தை எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் இதைப் பற்றி ஆய்வு செய்தனர்.
 
அதில், பலியான குழந்தைகள் அனைவரும் ஆஸ்பெட்டாஸ் வீட்டில் வசித்து தெரியவந்தது. பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் வீட்டுக்குள் வெப்பம் இறங்குவதும், மார்ச் மாதம் முதல் நீர்ச்சத்தை சரிசெய்ய வேண்டிய  ஓஆர்எஸ் பவுடர் வழங்காதததும் கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் வளர்சிதை மாற்றக் கோளாறு சார்ந்த நோய்கள் மற்றும், குழந்தைகள் குறைந்த எடையில் இருந்த காரணத்தினால் குழந்தைகள் இறந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
 
முதலில் பீகார் மாநிலத்தில் விளையும் லிச்சி பழத்தால்தான் குழந்தைகள் பலியானதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அம்மாநில அரசின் சுகாதாரத்துறையின் குறைபாடுகளே இதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ள அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.