புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2019 (15:47 IST)

பிரிக்ஸ் மாநாட்டுக்கு புறப்பட்டார் மோடி..

பிரேசிலில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டிற்கு பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்டார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆஃப்ரிக்கா ஆகிய நாடுகள் பங்குபெறும் பிரிக்ஸ் மாநாடு இந்த ஆண்டு வருகிற 13 மற்றும் 14 ஆம் தேதி பிரேசில் நாட்டின் தலைநகர் பிரெசிலியாவில் நடைபெறவுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் இந்த பிரிக்ஸ் மாநாட்டில், நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி குறித்து சந்திப்புகள் நடைபெறும். அதே போல் இந்த ஆண்டு பிரதமர் மோடி, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளின் அதிபர்களிடம் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

மேலும் பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்கிவிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.