வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 21 ஜூலை 2023 (16:33 IST)

மணிப்பூர் விவகாரம்: பிரதமரின் காலை தொட்டு வணங்கிய அமெரிக்க பெண்ணின் கருத்து..!

சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்க சென்றிருந்தபோது அவருடைய காலை தொட்டு வணங்கிய பிரபல அமெரிக்க பாடகி தற்போது மணிப்பூர் விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் 
 
மணிப்பூர் விவகாரம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் பிரதமரின் காலை தொட்டி வணங்கி ஆசி பெற்ற பாடகி மேரி மில்பென் என்பவர் மணிப்பூரில் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களுக்கு என் மனம் வருந்துகிறது என்றும் மனிதாபி மற்ற இந்த செயல் குறித்து பகிரங்கமாக பேசிய பிரதமர் மோடிக்கு நன்றி என்றும் மணிப்பூர்  பெண்கள் இந்தியாவின் மகள்கள் மட்டுமல்ல அவர்கள் கடவுளின் குழந்தைகள் என்றும் அந்த பெண்களுக்காக விரைவில் நீதி கிடைக்க நான் பிரார்த்தனை செய்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva