மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுப்பு.. ஸ்தம்பித்த பாராளுமன்றம்..!
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் செய்ய வேண்டும் என எதிர் கட்சிகள் வலியுறுத்திய நிலையில் மக்களவை சபாநாயகர் அதற்கு அனுமதி தராதத்தை அடுத்து பாராளுமன்றம் ஸ்தம்பித்தது.
நேற்று முதல் மக்களவையின் மழைக்கால கூட்ட தொடர் தொடங்கிய நிலையில் முதல் நாளிலேயே மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் அமளி செய்தனர்
இதன் காரணமாக நாடாளுமன்றம் நேற்று ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை நாடாளுமன்றம் கூடியவுடன் மீண்டும் எதிர்க்கட்சி எம்பிக்கள் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஆனால் இந்த கோரிக்கைக்கு மக்களவை சபாநாயகர் அனுமதி தராததை அடுத்து எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மக்களவை 12 மணிக்கு கூடும் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது
Edited by Mahendran