செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 மார்ச் 2020 (10:44 IST)

இந்தியாவில் கொரோனா வைரஸ்: ஏற்கனவே எச்சரித்த அமெரிக்க உளவுத்துறை

அமெரிக்க உளவுத்துறை இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே எச்சரித்த நிலையில் அதேபோல் தற்போது இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸ் பரவி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
நேற்று முன்தினம் வரை இந்தியாவில் மூன்று பேர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது 6 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
இந்தியாவிலுள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு உளவுத்துறை ஏற்கனவே அமெரிக்க உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
சீனாவுக்கு மிக அருகே இந்தியா இருப்பதாலும் இந்தியர்கள் பலர் சீனா உள்பட பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து கொண்டு இருப்பதாலும் இந்த கொரோனா வைரஸ் இந்தியாவை பரவ அதிக வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் அதிக வெப்பம் இருப்பதால் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இல்லை என்று இந்திய தரப்பில் தர கருதப்பட்டது இந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் வைரஸ் பரவி விட்டது அமெரிக்கா எச்சரித்தது போலவே பரவி உள்ளது. தற்போது 6 பேருக்கு இருக்கும் இந்த வைரஸ் இதோடு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இதற்கு மேல் பரவாமல் இந்தியா அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. குறிப்பாக வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமான பயணிகளை முழுவதுமாக சோதனை செய்ய வேண்டும் என்ற கருத்து பரவி வருகிறது