திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 மார்ச் 2020 (09:59 IST)

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை!

இந்தியாவில் இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கு வியன்னாவிலிருந்து வந்த ஒருவருக்கும், தெலுங்கானாவை சேர்ந்த ஒருவருக்குக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் வியன்னாவிலிருந்து வந்த நபர் பயணித்த விமானத்தில் வந்த மற்ற பயணிகள் மற்றும் சிப்பந்திகள் வெளியாட்கள் யாருடனும் தொடர்பு கொள்ள வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது ராஜஸ்தான் ஜெய்ப்பூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வியன்னாவிலிருந்து டெல்லி வந்த நபரோடு தொடர்பில் இருந்த ஆறு பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் ஆறு பேரும் ஆக்ராவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக நொய்டாவில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள பிரதமர் மோடி கொரோனா குறித்த முன்னெச்சரிக்கைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.