கொரோனா கால ஊரடங்கில் அம்பானியின் சொத்து மதிப்புகள் உயர்வு

Mukesh Ambani
Sinoj| Last Modified திங்கள், 25 ஜனவரி 2021 (23:46 IST)

இந்தியாவில் மிகப்பெரிய தொழிலதிபரும் ஆசியாவின் டாப் பணக்கார்களில் முதன்மையானவரும் உலகக் கோடீஸ்வர்களில் முதல் பத்து இடங்களில் இருப்பவருமான முகேஷ் அம்பானியின்
சொத்து மதிப்பு
இந்த கொரொனா கால லாக் டவுனின் அதிகரித்துள்ளது.


OXFAM என்ற நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. இதில், இந்தக் கொரோனா காலம் என்பது செல்வந்தர்களை மேலும் செல்வந்தர்களாகவும், ஏழைகளை மேலும் ஏழைகளாக மாற்றியுள்ளதாகத் தெரிவிக்கின்றன.

இதில், குறிப்பாக
கடந்த மார்ச் முதல் அக்டோபர் மதம் வரையிலான காலத்தில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இருமடங்காக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 36.8 பில்லியன் டாலராக இருந்த நிலையில், தற்போது, 78.3 பில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது.

இதனால் முதலில் உலக செல்வந்தர்களின் பட்டியலில் 21 வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி தற்போது, 6 வது முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :