சொந்த கட்சியையே விமர்சனம் செய்த ஜோதிமணி: காங்கிரஸில் பரபரப்பு

Last Modified வெள்ளி, 11 ஜனவரி 2019 (18:25 IST)
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் பிரிவினர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் கட்சி ஆதரித்துள்ள நிலையில் அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ஜோதிமணி இதனை விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி தனது டுவிட்டரில் கூறியதாவது:

உயர்சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆதரித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முடிவு துரதிர்ஷ்டவசமானது. இது நூற்றாண்டுகால ஒடுக்குமுறையைக் கருத்தில் கொண்டு சாதிய அடிப்படையில் மட்டும் இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் அரசியல் சாசனத்திற்கு முரணானது

உயர்சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 % இடஒதுக்கீடு என்பது இட ஒதுக்கீடு கொள்கையை காலப்போக்கில் நீர்த்துப்போகச் செய்யும் ஆபத்துள்ளது. வருடத்திற்கு 8 லட்சம் வருமானமுள்ளவர்களை ஏழைகளென வரையறுப்பது ஏற்புடையதல்ல. எந்த புள்ளிவிபரத்தின் அடிப்படையில் இம்மசோதா உருவாக்கப்பட்டுள்ளது


உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஏற்கனவே பொருளாதார அடிப்படியிலான 10% இடஒதுக்கீடு செல்லாது எனத் திட்டவட்டமாக தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் இந்த மசோதா எப்படி நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெறமுடியும்

இவ்வாறு ஜோதிமணி தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :