வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 8 டிசம்பர் 2019 (14:07 IST)

2 நாட்களில் 1 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி -அமைச்சர் காமராஜ் !

பருவம் தவறி மழை பெய்துள்ளதால், வெங்காயம் உற்பத்தியாகும் மாஹாராஷ்டிர, ஜார்கண்டில் போன்ற மாநிலங்களில் வெங்காயம் விலை  கடுமையாக உயர்ந்துள்ளது .இந்நிலையில் சென்னை  கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 100 முதல் ரூ. 120 வரை விற்பனை ஆகிறது.
அதனால் ஏழை எளிய மக்கள் வெங்காயத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.
 
இந்நிலையில், வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த  முயற்சி எடுத்து வருகிறது.
இதுகுறித்து அமைச்சர் காமராஜ் கூறியதாவது :
 
துருக்கி எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து 2 நாட்களில் 1 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என அமைச்சர் கமராஜ் தெரிவித்துள்ளார்.