செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 12 டிசம்பர் 2019 (14:02 IST)

குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு.. பதவியை தூக்கி எறிந்த ஐபிஎஸ் அதிகாரி

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் இச்சட்டத்திருத்தத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில் தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மஹாராஷ்டிராவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அப்தூர் ரகுமான் தனது ஐஜிபி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து ரகுமான் தனது டிவிட்டர் பக்கத்தில். ”குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இந்த மசோதாவை நான் எதிர்க்கிறேன். நாளை முதல் நான் அலுவலகத்திற்கு செல்லப்போவதில்லை. மேலும் நான் எனது பணியை ராஜினாமா செய்யப்போகிறேன்” என பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவரது மற்றொடு டிவிட்டில், “குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மதநல்லிணக்கத்துக்கு எதிரானது. இது மதரீதியாக மக்களை பிளவுபடுத்துகிறது. மேலும் இந்த மசோதா இந்தியாவில் வசிக்கும் கோடிக்கணக்கான முஸ்லீம்களை அச்சுறுத்துகிறது” எனவும் அப்தூர் ரகுமான் குற்றம் சாட்டியுள்ளார்.