புதன், 18 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (11:14 IST)

புதிய ரோமிங் திட்டத்தை அறிமுகம் செய்த ஏர்டெல்.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!

வாடிக்கையாளர்கள் வசதிக்காக புதிய ரோமிங் திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்திய நிலையில் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை அழைத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது புதிய ரோமின் அறிவிப்பை வெளியிட்டுள்ள வெளியில் அந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அந்தந்த நாட்டில் புதிய சிம் கார்டுகளை வாங்குவதே தற்போதைய நிலையாக இருக்கும் நிலையில் அதை தவிர்க்கும் வகையில் அனைத்து நாடுகளுக்கும் ’ஒரே சிம் ஒரே பிளான்’ என்ற பெயரில் புதிய சர்வதேச ரோமிங் திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

10 நாட்களுக்கு ஒரு ஜிபி இணைய சேவையுடன் 100 நிமிடங்கள் டாக் டைம் கொண்ட இந்த புதிய திட்டம் 899 ரூபாய் கட்டணத்தில் கிடைக்கும். அதே போல் 30 நாட்களுக்கான கட்டணம் ரூபாய் 2998 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தை பெற்றுக் கொண்டால் எந்த நாட்டுக்கு செல்கிறோமோ அந்த நாட்டின் சிம் கார்டுகளை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது என்பதால் வெளிநாட்டு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி பெரும் பயனை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran