அந்தணர் நல வாரியம் அமைக்க முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்தேன்: எஸ்வி சேகர் பேட்டி..!
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை சந்தித்த எஸ்வி சேகர், அந்தணர் நல வாரியம் அமைக்க வேண்டுகோள் விடுத்தேன் என்றும், என்னுடைய வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பட்டன் போன் கூட இல்லாத ஏழ்மை நிலையில் 10 லட்சம் பிராமணர்கள் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் ஓட்டலில் வேலை செய்தும், சமையல் வேலை செய்தும் வறுமை நிலையில் இருக்கிறார்கள் என்றும், அவர்களுக்காக அந்தணர் நல வாரியம் ஒன்று அமைக்க வேண்டும் என்று முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாயத்திற்கும் சட்டசபையில் பிரதிநிதிகள் உள்ளனர், ஆனால் பிராமணர் சமுதாயத்தினர் எம்.எல்.ஏ என யாரும் இல்லை என்றும், மூன்று சதவீதம் பிராமணர் இருந்தாலும் குறைந்தது 7 எம்எல்ஏ இருக்க வேண்டும், ஆனால் மூன்று எம்எல்ஏவாவது இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுகவிலேயே நிறைய பிராமணர்கள் இருக்கிறார்கள், அவர்களை எம்எல்ஏ ஆக்கினால் கூட எனக்கு மகிழ்ச்சி தான் என்றும் கூறினார். மேலும், இனிமேல் நான் தேர்தலில் நிற்க மாட்டேன் என்றும், பத்து வருடங்களுக்கு முன்பே இனி தேர்தலில் நிற்க மாட்டேன் என்று நான் கூறிவிட்டேன் என்றும், ஆனால் அதே நேரத்தில் திமுகவுக்காக பிரச்சாரம் செய்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.
Edited by Mahendran