செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 13 ஜனவரி 2024 (11:47 IST)

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை..! சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு..!

Gold
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 அதிகரித்துள்ளது.
 
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த நான்கு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், நேற்று  தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 
 
இந்நிலையில் தங்கத்தின் விலை இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 அதிகரித்து ஒரு  சவரன் ரூ. 46,760-க்கு விற்பனையாகிறது.  ஒரு கிராம் ரூ. 25 உயர்ந்து ரூ. 5,845-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,520 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,315 ஆகவும் விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை  ரூ.78.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000 க்கு விற்பனையாகிறது.