1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 பிப்ரவரி 2023 (09:03 IST)

விமான கண்காட்சி; இன்று முதல் விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றம்!

Flight
பெங்களூருவில் உள்ள எலகங்கா விமான நிலையத்தில் விமான கண்காட்சி நடைபெற உள்ளதால் விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள எலகங்கா விமான நிலையத்தில் பிப்ரவரி 13ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை 5 நாட்களுக்கு விமான கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இன்று தொடங்கியுள்ள நிலையில் இன்று முதல் 17ம் தேதி வரை கெம்பேகவுடா விமான நிலையத்தின் விமான சேவைகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அவற்றின் விவரங்கள்

08.02.2023 – 11.02.2023 வரை காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் விமானங்கள் இயக்கப்படாது.

12.02.2023 – 13.02.2023 வரை மதியம் 9 மணி முதல் 12 மணி வரையிலும், 14 மற்றும் 15ம் தேதிகளில் 12 மணி முதல் 2.30 மணி வரையிலும், 16 மற்றும் 17ம் தேதிகளில் காலை 9.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், 17ம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K