1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated: செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (21:36 IST)

துருக்கியில் உள்ள விமான நிலைய ஓடுபாதையில் பிளவு

turkey
துருக்கியில் உள்ள பிரபல விமான நிலையத்தில்  உள்ள ஓடுபாதையில் பிளவு ஏற்பட்டுள்ளது.

துருக்கி நாட்டின் தென் மத்திய பகுதியில் கடந்த 6 ஆம் தேதி சக்திவாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டன.

இந்த நில நடுக்கம் 7.8 ரிக்டர் அளவில் பதிவானதாக கூறப்பட்டது.

துருக்கி, சிரியா ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இதுவரை 5000 பேர் பலியானதாகவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், துபாய் நாட்டின் ஹடாய் மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில், உள்ள ஒரு ஓடுபாதையில் அதிகளவு பிளவு ஏற்பட்டுள்ளது.

இதைப் பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.