வியாழன், 30 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified சனி, 4 பிப்ரவரி 2023 (17:11 IST)

புதிய விமான நிலைய எதிர்ப்பை மாநில அரசு தான் தீர்க்க வேண்டும்: மத்திய அமைச்சர்!

syndhiya
சென்னையில் அமைய இருக்கும் புதிய விமான நிலையத்திற்கு ஏற்படும் எதிர்ப்பை மாநில அரசுதான் தீர்க்க வேண்டும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
இன்று சென்னையில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா பேட்டியளித்தார். அப்போது பரந்தூரில் அமைய இருக்கும் புதிய விமான நிலையம் குறித்து கூறிய அவர் சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் உறுதியாக அமைக்கப்படும் என்றும் அதற்கான பணிகள் மிக தீவிரமான நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார். 
 
புதிய விமான நிலையம் அமைக்க எழுந்திருக்கும் எதிர்ப்புகள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மாநில அரசு தான் தீர்வு காண வேண்டும் என்றும் அமைச்சர்ஜோதிராதித்யா தெரிவித்தார். மத்திய அரசின் பணி விமான நிலையம் அமைப்பது மட்டுமே என்றும் நிலம் கையகப்படுத்துவது உள்பட அனைத்தும் மாநில அரசு தான் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்தார்.
 
 
Edited by Mahendran