ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 5 ஜூலை 2020 (09:38 IST)

தூய்மையான காற்று… 2024 இலக்கை 100 நாட்களுக்குள் எட்டிய இந்தியா!

இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் காற்றின் தரம் மிக வேகமாக முன்னேறி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவின் பெரு நகரங்களான டெல்லி, மும்பை மற்றும் சென்னை ஆகியவற்றில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது. இதற்கு முக்கியக் காரணங்களாக தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகை மற்றும் வாகனப் போக்குவரத்து ஆகியவை சொல்லப்பட்டு வந்தன. கடந்த ஆண்டு டெல்லியில் மோசமான காற்று மாசு சூழல் உருவாகி மக்கள் அவதிக்குள்ளாகினர்.

இதனால் காற்று மாசுபாட்டைக் குறைப்பது குறித்து நிறையக் கருத்துகள் சொல்லப்பட்டு வந்தன. இதன் ஒரு அங்கமாக 2024ஆம் ஆண்டு தேசிய தூய்மையான காற்றை சுவாசித்தல் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்தியாவில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காற்றின் தரம் மிக வேகமாக உயர்ந்து வருவதாக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  இந்த செய்தியானது பெருநகர மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.