திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2023 (19:23 IST)

காதலியை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் வேகவைத்து நாய்க்கு போட்டவருக்கு எய்ட்ஸ்...

manoj -saraswathi
மஹாராஷ்டிர மாநிலத்தில் 'லிவ் இன்' காதலுடன் வசித்து வந்த பெண் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் கொலை செய்த நபர் மனோஜுக்கு எய்ட்ஸ் இருப்பதாக கூறப்படுகிறது.

மஹாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் மிரா- பஹ்யந்தர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சரஸ்வதி வித்யா(36). இவர் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசசித்து வரும் தன் காதலர் மனோஜ் ஷைனி( 56 வயது) என்பவருடன் வாழ்ந்து வந்தார்.

சரஸ்வதியும், மனோஜும் கடந்த 3 ஆண்டுகளாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில்,அடுக்குமாடி குடியிருப்பின் 7 வது மாடியில் சரஸ்வதியின் சிதைந்த உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது. அவர் படுகொலை செய்யப்பட்டு உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்டுள்ளது.

இதுபற்றி போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்து  அவர்கள் துண்டுதுண்டான சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தப் படுகொலை பற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து  தீவிரமாக விசாரித்தனர். இதன் முதற்கட்டமாக 'லிவ் இன்' காதலர் மனோஜை கைது செய்து அவரிடம் விசாரித்து வந்தனர். இந்த  நிலையில், காதலியைக் கொன்றது பற்றி மனோஜ் போலீஸில் பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்துள்ளர்.

அதில், ''எனக்கு சொந்த ஊர் போரி விலி. 10 ஆண்டுகளுக்கு முன் என் தந்தை இறந்துவிட்டார். தாயும் இப்போது இல்லை. நான் கோரெ பகுதியில் பால் பண்ணை வைத்து இருந்தேன்… அதை வனத்துறை அதிகாரிகள் அகற்றிவிட்டனர்.

போரி விலி பகுதியில் உள்ள ரேசன் கடையில் வேலை பார்த்தேன். அந்த சமயம் நியூமும்பை வாஷி பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு செல்வேன். அப்போது, 2010 ஆம் ஆண்டு மாக்கெட்டில் அகமத்  நகரில் வசித்த சரஸ்வதி வைத்யாவை சந்தித்தேன். அவர் என்னிடம் அனாதை என்று கூறியதால், அவர் மேல் எங்கு இரக்கம் ஏற்பட்டதால், அவரை வீட்டில் வேலைக்கு உதவிக்காக அழைத்துச் சென்றேன். அவளை மகளாகத்தான் பார்த்துக் கொண்டேன்.

பின்னர், அவள் என்னை காதலிக்கத் தொடங்கினான்.   நாங்கள் இருவரும் காதலித்து வந்ததால், கடந்த  ஆண்டுகளுக்கு முன்பு மீரா ரோட்டில் உள்ள கீதா அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கினோம். 2 ஆண்டுகளுக்குப் பின் இதே கட்டிடத்தில்  7 வது மாடியில் குடிபுகுந்து கணவன் மனைவியாக வாழத் தொடங்கினோம்.

தாலி கட்டாமல் வாழ்ந்தபோது எனக்குத் திடீரென்று  வேலை பறிபோனது. அதனால் வருமானத்திற்கு கஷ்டப்பட்டோம். இதனால் வீட்டில் தகராறு எழுந்தது. கடந்த  4 ஆம் தேதி மீண்டும் எங்களுக்குள் பிரச்சனை வந்தபோது அவளை அடித்து, உதைத்தேன்… இதில் அவர் இறந்துவிட்டாள்.

சமீபத்தில், டெல்லியில் காதலன் ஒருவர் காதலி ஷரத்தா வாக்கரை கொன்று  உடலை துண்டுதுண்டாக வெட்டி, பிரிட்ஜில் வைத்தது நினைவுக்கு வந்தது.  அதனால், சரஸ்வதியின் உடலை  உடலை வெட்டி, ரத்தத்தை வாளியில் தண்ணீர் எடுத்துக் கழுவினேன். உடலை ரம்பம், கத்தியால்  அறுத்து குக்கரில் வேக வைத்து, அருகிலுள்ள ரயில்வே தண்டவாளத்தில் உள்ள நாய்களுக்கு உணவாக போட்டேன். 

சம்பவம் நடந்த தினத்தன்று வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தேன். அப்போது அடுக்குமாடி குடியிருப்பில் நுழைவு வாயிலில்  நின்று கொண்டிருந்த போலீஸார் என்னை கைது செய்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மனோஜ்க்கு எய்ட்ஸ் நோய் இருந்ததாகவும், அதன் பாதிப்பால் தான் இறந்துவிட்டால், சரஸ்வதி அனாதையாகி விடுவாள் என்று கருதி இந்தக் கொலையை செய்ததாகக் கூறப்படுகிறது.