1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 18 அக்டோபர் 2022 (09:00 IST)

மீண்டும் ரெய்டு: கேப் விட்டு ஆப்பு வைக்கும் NIA!

நாட்டின் பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.


பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக குறிப்பிட்ட அமைப்பின் அலுவலகங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை நடத்தியது. பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்தல், தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் சேர மக்களை ஊக்குவித்தல் உள்ளிட்ட தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் கடந்த மாதம் தேசிய புலனாய்வு அமைப்பு இந்தியா முழுவதும் அதிரடி சோதனை நடத்தியது. தமிழகத்திலும் சோதனை நடத்தப்பட்டு நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து நாட்டின் பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களின் பல இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். . 6 மாநிலங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் இந்த சோதனையில் முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited By: Sugapriya Prakash